அப்ரிடியின் பிரியாவிடை தொடர்பான விடயம் கைவிடப்பட்டது?

Monday, September 19th, 2016

பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் ஷாஹித் அப்ரிடிக்கு, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையே ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெறவுள்ள போட்டிகளின்போது பிரியாவிடை வழங்கும் நகர்வு கைவிடப்பட்டுள்ளது.

.அணித் தெரிவுக் குழுவின் தலைவர் இன்ஸமாம்-உல்-ஹக்கினாலேயே மேற்கூறப்பட்ட நகர்வு முன்வைக்கப்பட்டிருந்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியபோதும், சபையின் தலைவர் ஷகாரியார் கான் சத்திரசிகிச்சையிலிருந்து குணமடைந்து வருகையிலும் நிறைவேற்றுச் செயற்குழுவின் தலைவர் நஜாம் சேதி, இங்கிலாந்தில் விடுமுறையில் உள்ள நிலையிலும் மேற்படி நகர்வானது முன்னகர்ந்து செல்லவில்லை.

இதேவேளை, பாகிஸ்தான் அணியின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான தலைவரான அஸார் அலியை, தலைமைப் பதவியிலிருந்து விலகுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கோரியிருந்தபோதும், அவர் மறுத்துள்ள நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராக ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெறும் தொடருக்குத் தலைவராக அஸார் அலியே தொடருகின்றார். ஏனெனில், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் விதிமுறைகளின்படி, அணியின் தலைவரை நியமிக்கவோ அல்லது நீக்கவோ, கிரிக்கெட் சபையின் தலைவராலேயே முடியும் என்ற நிலையில், அவர் தற்போது சத்திரசிகிச்சையிலிருந்து குணமடைந்து வருகின்றார்.

shahid-afridi-thinking

Related posts: