வெற்றிபெற்றது எப்படி – மும்பை பயிற்சியாளர் ஜெயவர்த்தன!

Tuesday, May 7th, 2019

கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதே வெற்றிக்கு காரணம் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின, கட்டாய வெற்றியை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி மிகவும் மோசமான தோல்வியை சந்தித்ததால், பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.

பலம் வாய்ந்த இலங்கை அணியை 133-ஓட்டங்களுக்குள் சுருட்டி வெற்றி பெற்ற மும்பை அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்தால், அந்தணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் போட்டி முடிந்த பின்பு மும்பை அணியின் தலைமை பயிற்சியாளரும், இலங்கை அணியின் முன்னாள் வீரருமான ஜெயவர்த்தனே கூறுகையில், இதற்கு முன் முடிந்த கொல்கத்தா போட்டியில் அந்தணியின் சாதரணமாக எங்களை கணித்துவிட்டனர்.

இதனால் இந்த முறை அவர்கள் தங்கள் திட்டங்களை கணித்துவிடக்கூடாது என்பதற்காக, விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்கினோம்.

ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை முக்கிமான நேரத்தில் வீழ்த்தி நம்பிக்கை கொடுத்தார். பின்னர் மலிங்கா தனது அனுபவ பவுலிங்கால் சில விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதற்கிடையே ஓட்டங்களை கட்டுப்படுத்தி குருணல் பாண்டியா எதிரணிக்கு நெருக்கடியை அதிகரித்தார் என்று தெரிவித்துள்ளார்.

Related posts: