அசியக் கிண்ணத்தை 6 ஆவது தடவையாக வென்ற இலங்கை அணிக்கு அரச தலைவர்கள் வாழ்த்து!

Monday, September 12th, 2022

2022 ஆம் ஆண்டுக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் வென்ற இலங்கை அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஆசிய கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்ட இலங்கை கிரிக்கெட் அணிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும்  வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

தனது ட்விட்டர் தளத்திலேயே அவர் இந்த வாழ்த்தை பதிவிட்டுள்ளார்.

நாட்டில் இருந்து தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாடு திரும்பிய பின்னர் இட்டுள்ள முதலாவது பதிவு இது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்பதாக 2022 ஆம் ஆண்டுக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 23 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறும் குறித்த போட்டியில் பாகிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது. இதற்கமைய, அந்த அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அணிசார்பில் அதிகபடியாக பானுக ராஜபக்ஷ 71 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரில் இவர் பெற்ற 03ஆ வது அரைச்சதம் இதுவாகும்.

இவர் 45 பந்துகளில் 06 நான்கு ஓட்டங்கள் 03 ஆறு ஓட்டங்கள் அடங்களாக இவ்வாறு 71 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். அத்துடன், வனிந்து ஹசரங்க 36 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இவர் 21 பந்துகளில் 05 நான்கு ஓட்டங்கள், ஒரு ஆறு ஓட்டம் அடங்களாக இவ்வாறு 36 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். தனஞ்சய டி சில்வா 28 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இவர் 21 பந்துகளில் 04 நான்கு ஓட்டங்கள் அடங்களாக இவ்வாறு 28 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

போட்டியின் முதல் ஓவரில் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான குசல் மெண்டிஸ் ஓட்டங்கள் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்தார். அடுத்ததாக பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட பெத்தும் நிஸ்ஸங்க 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து 4 ஆவது இடத்தில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய தனுஷ்க குணதிலக்க ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

இலங்கை அணி ஆரம்பத்திலேயே விக்கெட் இழந்த போது அமைதியாக துடுப்பெடுத்தாடிய தனஞ்சய டி சில்வா 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணித்தலைவர் தசுன் சானக்க 02 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டமிழந்தார்.

இந்நிலையில், வனிந்து ஹசரங்க களமிறங்க பானுக ராஜபக்ஷவுடன் ஜோடி சேர்ந்து இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையை சற்று உயர்த்துவதற்கு உருதுணையாக இருந்தார்.

6 ஆவது விக்கெட்டுக்கான இவர்களின் இணைப்பாட்டத்தில் 58 ஓட்டங்களை அணிக்காக இருவரும் பெற்றுக்கொடுத்தனர்.

சிறப்பாக துடுப்பெடுத்தாடிய வனிந்து ஹசரங்க 36 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் ஆட்டமிழந்து சென்றார்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணியின் ஹரிஸ் ரவூப் 04 ஓவர்கள் பந்துவீசி 29 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

ஷதாப் கான் 04 ஓவர்கள் பந்துவீசி 28 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இப்திகார் ஹகமட் 03 ஓவர்கள் பந்துவீசி 21 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். மொஹம்மட் ஹஸ்னைன் 04 ஓவர்கள் பந்துவீசி 41 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றவில்லை. நசீம் ஷா 04 ஓவர்கள் பந்துவீசி 40 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

இந்நிலையில், 171 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 147ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

அணிசார்பில் அதிகபடியாக மொஹம்மட் ரிஸ்வான் 55 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரில் இவர் பெற்ற 16ஆவது அரைச்சதம் இதுவாகும்.

இவர் 47 பந்துகளில் 04 நான்கு ஓட்டங்கள் ஒரு ஆறு ஓட்டம் அடங்களாக இவ்வாறு 55 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். அத்துடன், இப்திகார் அஹமட் 32 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இவர் 31 பந்துகளில் 02 நான்கு ஓட்டங்கள் ஒரு ஆறு ஓட்டம் அடங்களாக இவ்வாறு 32 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். மொஹம்மட் நவாஸ் 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

மேலும் பாபர் அசாம் 5 ஓட்டங்களுக்கும், பகார் ஜமான் ஓட்டங்கள் எதனை பெறாமலும் ஆட்டமிழந்தனர். ஷதாப் கான் 8 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

எனினும், பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட அசிப் அலி ஓட்டங்கள் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்து சென்றார். மொஹம்மட் ஹஸ்னைன் 14 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் இலங்கை அணியின், மகீஸ் தீக்ஷன 04 ஓவர்கள் பந்துவீசி 25 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

ப்ரமோத் மதுஷான் 04 ஓவர்கள் பந்துவீசி 34 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

வனிந்து ஹசரங்க 04 ஓவர்கள் பந்துவீசி 27 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

சாமிக்க கருணாரத்ன 04 ஓவர்கள் பந்துவீசி 33 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். இந்த இன்னிங்ஸில் மொத்தமாக14 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து, நாட்டின் அரச - தனியார் பங்குடமை நிறுவனங்கள் சிலவும் மர...
எரிபொருள் மற்றும் மின்சார பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமைச்சர் ஒருவர் அவசியம் - பொதுப் பயன்பாடுகள் ...
அரசாங்க ஊழியர்களுக்கு திட்டமிட்டபடி சம்பளம் வழங்கப்படும் - வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என நித...