இலங்கைக்கான தொடரிலிருந்து முரளி விஜய் வெளியேற்றம்!
Tuesday, July 18th, 2017
இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரிலிருந்து, இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் முரளி விஜய், காயம் காரணமாக வெளியேற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, மற்றோர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஷீகர் தவான் இணைக்கப்பட்டுள்ளார்.
அண்மைக்காலமே, முரளி விஜய்க்கு, அவரது மணிக்கட்டில் உபாதை காணப்பட்டது. அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவில் வைத்து நடந்த தொடரிலும், அவருக்கு இவ்வுபாதை காணப்பட்டது.
இந்நிலையில், இலங்கைத் தொடருக்கு முன்னதான பயிற்சிப் போட்டியில், அவருக்கு அவ்வுபாதை மீண்டும் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்தத் தொடர், ஜூலை 26ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது
Related posts:
நாட்டுக்கு கிடைத்த இயற்கையின் பரிசு டில்ஷான் -சங்கா, மஹேல புகழாரம்!
சொந்த செலவில் இங்கிலாந்து செல்லும் இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபை உறுப்பினர்கள்!
இலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்!
|
|
|


