இறுதி போட்டியில் சானியா ஜோடி தோல்வி!

Tuesday, May 10th, 2016
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரை இறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) 7-5, 6-4 என்ற நேர்செட்டில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடாலை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
பெண்கள் இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டியில் சானியா மிர்சா (இந்தியா)-மார்ட்டினா ங்கிஸ் (சுவிட்சர்லாந்து) ஜோடி 4-6, 4-6 என்ற நேர்செட்டில் பிரான்ஸ்சின் கரோலின் கார்சியா-கிறிஸ்டினா மாட்னோவிச் இணையிடம் தோல்வி கண்டு சாம்பியன் பட்ட வாய்ப்பை இழந்தது

Related posts: