கோபா அமெரிக்கா பெண்கள் கால்பந்து பிரேசில் அணி ‘சாம்பியன்’

Wednesday, April 25th, 2018

கோபா அமெரிக்கா பெண்கள் கால்பந்து போட்டி சிலி நாட்டில் நடந்தது. இதன் கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி 7-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

பிரேசில் அணி தனது 7 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. சிலி அணி 2-வது இடம் பிடித்தது. இந்த வெற்றியின் மூலம் பிரேசில், சிலி அணிகள் அடுத்த ஆண்டு (2019) பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றன. அத்துடன் பிரேசில் அணி 2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி கண்டது.

Related posts: