இன்று ஆறுதல் வெற்றியை பெறுமா இலங்கை !

Tuesday, October 23rd, 2018

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஒருநாள் கிரிக்கட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

ஏலவே இந்த தொடரை  3 – 0 என்றக் கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது. இந்தநிலையில் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி இதுவரையில் பயன்படுத்தாத வீரர்களைக் கொண்டு களமிறங்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக இன்று ஜோ டென்லி, ஷாம் கரன் மற்றும் மார்க் வுட் ஆகியோருக்கு இன்று இடமளிக்க வாய்ப்புகள் உள்ளன.

இலங்கை அணியில் கசுன் ராஜித்தவிற்கு பதிலாக வேறொருவர் களமிறக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

போட்டி இடம்பெறும் ஆர்.பிரேமதாச ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானதாகும்.  அத்துடன் போட்டியின் போது மழைக் குறுக்கிட வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, போட்டி இடம்பெறும் ஆர்.பிரேமதாச ஆடுகளத்தை அண்மித்த பகுதியிலும் மாளிகாவத்தை பகுதியிலும் இன்று நண்பகல் 12.30 மணிக்கு பின்னர் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

Related posts: