சுமித், வோர்னரின் தண்டனையில் மாற்றமில்லை!

Tuesday, September 4th, 2018

அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் சுமித் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கட் தடையானது அவ்வாறே பேணப்படும் என்று அந்த நாட்டின் உள்ளூர் கிரிக்கட் சபைகள் அறிவித்துள்ளன.

நியு சவுத் வேல்ஸ் கிரிக்கட் கழகத்தின் புதிய தலைவர் ஜோன் நொக்ஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த கழகத்தின் வருடாந்த அறிக்கையை வெளியிட்டு உரையாற்றிய அவர், அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர்கள் உலக அரங்கில் நாட்டின் அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடுகின்றனர்.

அவர்கள் போட்டித் தன்மை வாய்ந்த சிறந்த கிரிக்கட்டை விளையாட வேண்டும் என்பது மட்டும் இன்றி, சரியான கிரிக்கட்டை விளையாட வேண்டும் என்பதே மக்களது எதிர்பார்ப்பாகும்.

பந்தினை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் சுமித் மற்றும் வோர்னருக்கு 12 மாத கால போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளமையானது அதிகபட்ச தண்டனையாகும். இருப்பினும் அவுஸ்திரேலிய கிரிக்கட்டின் இந்த தண்டனையை அனைத்து கழகங்களும் பேணும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: