தங்க காலணி யாருக்கு?

Tuesday, July 10th, 2018

ரஷ்ய உலகக் கிண்ண கால்பந்து தொடரில், அதிக கோல்கள் அடித்ததற்காக தங்க காலணி விருது பெறும் வீரர் யார் என்ற போட்டி நிலவுகிறது.

உலகக் கிண்ண கால்பந்து தொடர்களில் அதிக கோல்கள் அடித்த வீரருக்கு தங்க காலணி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1982ஆம் ஆண்டு உலகக் கிண்ண தொடரில் இந்த விருது ‘நிஷீறீபீமீஸீ ஷிலீஷீமீ’ எனும் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன் பின்னர், 2010ஆம் ஆண்டு முதல் என மாற்றம் செய்யப்பட்டது. இந்த விருதுடன் அதிக கோல் அடித்தவர்களில் 2ஆம், 3ஆம் இடம் பிடிக்கும் வீரர்களுக்கு வெள்ளி காலணி மற்றும் வெண்கல காலணியும் வழங்கப்பட்டு வருகிறது.

ஒன்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் சம அளவில் கோல்கள் அடித்திருந்தால், பெனால்டி கோல்கள் நீக்கப்பட்டு கணக்கெடுக்கப்படும். அவ்வாறு பெனால்டி வாய்ப்பும் சமமாக இருக்கும் நிலையில் கிssவீt எனும் கோல்களுக்காக வழங்கப்பட்ட உதவிகள் கணக்கில் கொள்ளப்படும்.

இந்த முறையானது 1994ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அதிலும் சமநிலை வகித்தால் குறைந்த நேரம் விளையாடிய வீரருக்கு தங்க காலணி வழங்கப்படும்.

இந்த முறை கடந்த 2006ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண தொடரில் இங்கிலாந்து வீரர் ஹாரி கேன் 6 கோல்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.

பெல்ஜிய வீரர் ரோமலு லுகாகு 4 கோல்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்நிலையில் பெல்ஜியம் அணி பிரான்ஸுடனும், இங்கிலாந்து அணி குரோஷியாவுடனும் அரையிறுதியில் மோத உள்ளன.

இந்தப் போட்டிகளின் முடிவில் அதிக கோல்கள் அடித்த வீரர் யார் என்பது தெரிந்துவிடும். இதுவரை இந்த விருதினை பெற்றவர்களின் விபரத்தை இங்கே காண்போம்.

தங்க காலணி விருது பெற்ற வீரர்கள்

  • 1982ஆம் ஆண்டு – போலோ ரோஸி (இத்தாலி – 6 கோல்கள்)
  • 1986ஆம் ஆண்டு – கேரி லின்கர் (இங்கிலாந்து – 6 கோல்கள்)
  • 1990ஆம் ஆண்டு – சல்வாடோர் சில்லாக்கி (இத்தாலி – 6 கோல்கள்)
  • 1994ஆம் ஆண்டு – ஒலேக் சலென்கோ (ரஷ்யா – 6 கோல்கள்), ஹரிஸ்டோ ஸ்டோய்கோ (பல்கேரியா – 6 கோல்கள்)
  • 1998ஆம் ஆண்டு – டெவோர் சூகேர் (குரோஷியா – 6 கோல்கள்)
  • 2002ஆம் ஆண்டு – கிறிஸ்டியானோ ரொனால்டோ (பிரேசில் – 8 கோல்கள்)
  • 2006ஆம் ஆண்டு – மிரோஸ்லோ குளோஸ் (ஜேர்மனி – 5 கோல்கள்)
  • 2010ஆம் ஆண்டு – தாமஸ் முல்லர் (ஜேர்மனி – 5 கோல்கள்)
  • 2014ஆம் ஆண்டு – ஜேம்ஸ் ரோட்ரிகாஸ் (கொலம்பியா – 6 கோல்கள்)

Related posts: