இந்திய அணி வெற்றி!
Monday, September 18th, 2017
இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இந்திய அணி டக்வட் லூயிஸ் முறையின்படி, 26 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 281 ஓட்டங்களை பெற்றது.
இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ஆர்திக் பாண்டியா (uardik Pandya) 83 ஓட்டங்களையும், மகேந்திரசிங் டோனி 79 ஓட்டங்களையும் அதிக பட்சமாக பெற்று கொடுத்தனர்
இந்தநிலையில், மழை காரணமாக அவுஸ்திரேலிய அணிக்கு 21 ஓவர்களில் 164 வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 21 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது
Related posts:
தொடருமா ரஷ்யாவின் வெற்றி! - எகிப்து அணியுடன் இன்று மோதல்!
தொடரை கைப்பற்றிய இந்தியா!
தென் கொரியாவை இலகுவாக வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தது பிரேஸில்!
|
|
|


