இந்தியன் ப்ரீமியர் லீக் – முதலாவது தகுதிகாண் போட்டியில் வென்று இறுதிப் போட்டிக்கு தெரிவானது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

Wednesday, May 22nd, 2024

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதலாவது தகுதிகாண் போட்டி நேற்று (21) இடம்பெற்றது.

குறித்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதற்கமைய, அந்த அணி 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இந்நிலையில், 160 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 13.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இதற்கமைய, 2024ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தெரிவானது.

000

Related posts: