இந்தியன் ப்ரீமியர் லீக் – சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை வென்று Play Off சுற்றில் விளையாடும் தகுதியை பெற்றது ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு!
Sunday, May 19th, 2024
இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 68ஆவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 27 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியுடன் 4 ஆவதும் இறுதியுமான அணியாக Play Off சுற்றில் விளையாடும் தகுதியை ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பெற்றுக் கொண்டது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது.
அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 218 ஓட்டங்களைப் பெற்றது.
விராட் கோலி, டு ப்ளெசிஸ் ஆகியோரின் அபார துடுப்பாட்டமும், களத்தடுப்பும் குறித்த வெற்றியில் முக்கிய பங்காற்றின.
219 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து தோல்வியைத் தழுவியதுடன் 10 ஓட்டங்களால் Play Off சுற்றுக்கான வாய்ப்பையும் தவறவிட்டது.
குறித்த போட்டியின் நிறைவில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் தலா 14 புள்ளிகளைப் பெற்றிருந்த போதிலும் நிகர ஓட்ட வேக அடிப்படையில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி Play Off வாய்ப்பை உறுதி செய்து கொண்டது.
இந்தநிலையில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4ஆவது இடத்தைப் பெற்று Play Off சுற்றுக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


