இங்கிலாந்திற்கு மரண பயத்தை காட்டிய வங்கதேசம்!

வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றுவிட்டாலும், வங்கதேச அணி இங்கிலாந்து அணிக்கு தோல்வியின் பயத்தை காட்டிவிட்டது.
இங்கிலாந்து- வங்கதேசம் அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி நேற்று மிர்பூரில் நடந்தது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 309 ஓட்டங்களை குவித்தது.
இங்கிலாந்து அணி சார்பில் பென் ஸ்டோக்ஸ் சதம் அடித்தார். அவர் 8 பவுண்டரி, 4 சிக்சர் என மொத்தம் 101 ஓட்டங்களை எடுத்தார். அதேபோல் பட்லர் (63), டக்கெட் (60) அரைசதம் விளாசினர் இதன் பின்னர் 310 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேசம் அதிரடி காட்ட ஆரம்பித்தது.
தொடக்க வீரர் தமிம் இக்பால் (17) சொதப்பினார். அடுத்து வந்த சபீர் (18), ரஹீம் (12), முகமதுல்லா (25) ஆகியோர் வரிசையாக சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.மற்றொரு தொடக்க வீரரான இம்ரூல் கெயாஸ் (112) அதிரடியாக ஆடி சதம் விளாசினார். சாஹிப் அல் ஹசனும் (79) இங்கிலாந்து பந்துவீச்சை விளாச வங்கதேசம் வெற்றியை நெருங்கியது.
இருப்பினும் அடுத்து வந்தவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, வங்கதேச அணி 47.5 ஓவரில் 288 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் அதிர்ஷ்டவசமாக இங்கிலாந்து அணி 21 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி சார்பில், ஜாக் பால் 5 விக்கெட்டுகளையும் அடில் ரஷிட் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
Related posts:
|
|