இந்திய அணிக்கு கடும் அபராதம் !

Thursday, February 6th, 2020

நியூஸிலாந்து அணியுடன் நேற்று இடம்பெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டியில், தாமதமான பந்துவீச்சு காரணமாக, இந்திய அணிக்கு 80 வீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஹமில்டன் நடைபெற் இந்த போட்டியில் நியசிலாந்து அணி, நான்கு விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றது. போட்டியின்போது, இந்திய அணி நான்கு ஓவர்கள் தாமதமாக பந்து வீசியது.

சர்வதேச கிரிக்கட் பேரவையின், வீரர்கள் மற்றும் வீரர்களின் ஆதரவு பணியாளர்களின் நடத்தை ஒழுங்கு விதிகளின் 2.22 ஆம் பிரிவுக்கு அமைய, குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்காத ஒவ்வொரு ஓவருக்கும், அந்த அணியின் வீரர்களுக்கு போட்டிக்கான வேதனத்தில் 20 வீத அபராதம் விதிக்கப்படும்.

இதனடிப்படையில், நான்கு ஓவர்கள் தாமதமாக வீசிய இந்திய அணி வீரர்களின் வேதனத்தில் 80 வீதம் அவராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நியூஸிலாந்து அணிக்கு எதிராக இடம்பெற்ற இறுதி இரண்டு 20 க்கு 20 போட்டிகளிலும், தாமதமான பந்துவீச்சு காரணமாக இந்திய அணிக்கு 40 மற்றும் 20 வீத அபராதங்கள் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: