ஆட்ட நிர்ணய சதி : இலங்கையின் 3 வீரர்கள் தொடர்பில் விசாரணை – சர்வதேச கிரிக்கட் பேரவை!
Wednesday, June 3rd, 2020
ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் இலங்கை கிரிக்கட் அணியின் மூன்று வீரர்கள் தொடர்பில் சர்வதேச கிரிக்கட் பேரவை விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வரும் பாடசாலை பயிற்சியாளர்கள் 225 பேருக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உலகக்கிண்ணம் வென்ற இலங்கை அணி உணர்ச்சிவசப்பட்டு தருணம்!
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மோர்கல் மோசமான சாதனை
மேற்கிந்திய தொடருக்காக செல்லும் இலங்கை அணி!
|
|
|


