ஆசிய நடை பந்தய போட்டிக்கான அணியில் இருந்து குஷ்பிர் கவுர் நீக்கம்!

ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெறும் ஆசிய நடைபந்தய போட்டிக்கான அணியில் இருந்து இந்திய நடைபந்தய வீராங்கனை குஷ்பிர் கவுர் நீக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்து தெரிவித்த அவர்,
‘எனக்கு காய்ச்சலும் இல்லை. உடல் நலனும் பாதிக்கப்படவில்லை. ஆனால் பயிற்சியாளர் அலெக்சாண்டர் ஆர்ட்சிபாசெவ் தான், ‘இந்திய தடகள சம்மேளனத்தின் மூலம் நேரடியாக ஆசிய போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்று வருகிறேன்.
எனவே தேசிய போட்டியில் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார். நாங்கள் அவரின் கீழ் பயிற்சி செய்கிறோம். நாங்கள் பயிற்சியாளர் சொல்வதை கேட்க வேண்டுமா? அல்லது தடகள சம்மேளனம் சொல்வதை கேட்க வேண்டுமா?
என் மீது எந்த தவறும் இல்லை. எனவே ஆசிய போட்டியில் பங்கேற்க தடகள சம்மேளனம் என்னை அனுமதிக்க வேண்டும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
ICC டெஸ்ட் குழுவில் இலங்கையின் ரங்கனவுக்கு இடம்!
உபுல் தரங்க விளையாடுவதற்கு தடை!
வடக்கின் முதல்வனாய் முடிசூடியது யாழ் இந்துக் கல்லூரி!
|
|