ஆசியக் கிண்ண மகளிர் கிரிக்கெட் – அரையிறுதிச் சுற்றுக்கு இலங்கை அணி தகுதி!
Thursday, July 25th, 2024
ஆசியக் கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டித் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு இலங்கை மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது.
குறித்த போட்டியில் தாய்லாந்து அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை மகளிர் அணி அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தாய்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதன்படி தாய்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 93 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
94 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 11.3 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் ஆட்டமிழக்காமல் அணித்தலைவி சமரி அத்தபத்து அதிகபட்சமாக 49 ஓட்டங்களையும், விஸ்மி குணரத்ன 39 ஓட்டங்களையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


