ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் – பாகிஸ்தான். நேபாள அணிகள் இலங்கை வந்தடைவு!
Thursday, August 31st, 2023
2023 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் இன்று (31) காலை இலங்கையை வந்தடைந்தன.
அதன்படி இரு அணிகளையும் சேர்த்து சுமார் 80 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் இலங்கையை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அணிகளின் வருகையினால் கட்டுநாயக்க விமான நிலையத்திலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை ஆசியக் கிண்ண தொடரில் பங்கேற்பதற்கான இந்திய அணி நேற்று நாட்டை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நியூசிலாந்தை மிரட்டிய வங்கதேசம்!
மஞ்செஸ்டர் தாக்குதல் : கிரிக்கெட் தொடரை பாதிக்காது!
குசல் மென்டிஸிற்கு பிணை!
|
|
|


