நபரின் குடும்பத்திற்கு நியாயம் வழங்குவேன்!- நுவான் குலசேகர!

Wednesday, September 21st, 2016

நாட்டின் நல்லதொரு பிரஜை என்ற ரீதியில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு நியாயம் வழங்க முயற்சிப்பேன் என இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் மாலை கடவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் நேற்று வடகொழும்பு ராகம வைத்தியசாலையில் நடைபெற்ற மரண விசாரணையின் போது குலசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

திங்கட்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் நான் கம்பஹா வீட்டுக்கு சென்று கொண்டிருந்தேன். கிரில்லவலவை கடந்ததும் வீதியில் ஓரளவு வாகன நெரிசல் காணப்பட்டது. சாதாரணமாக மணிக்கு 50 கிலோ மீற்றர் வேகமே காணப்பட்டது. வேகத்தை சரியாக கூற முடியாது என்ற போதிலும் அதிக வேகமாக பயணம் செய்ய முடியாது.

திடீரென வீதியின் நடுவில் ஏதோ ஒன்று வருவதனை கண்டேன். வாகனத்தை இடதுபக்கம் திருப்ப முயற்சித்தேன் அத்துடன் பிரேக் இட்டேன். எனது வாகனம் இடது பக்கம் நிறுத்தப்பட்டது.

பக்க கண்ணாடிகளில் பார்த்த போது மக்கள் குழுமியிருந்ததனைக் கண்டேன். அங்கு சென்ற போதே ஒருவர் விழுந்து கிடந்ததனைக் கண்டேன்.

நான் வாகனத்தில் ஒரு நிமிடத்திற்கு குறைந்த நேரம் அமர்ந்திருந்த பின்னரே இறங்கிச் சென்றேன்.இரத்தத்தை கண்டேன். தலையில் காயம் ஏற்பட்டிருந்தது. எனக்கு பயம் ஏற்பட்டது. வாகனம் அவ்வாறே இருக்க நான் கடையொன்றில் இருந்தேன். எனக்கு முன்னதாகவே ஒருவர் இந்த சம்பவம் பற்றி பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இதனால் பொலிஸாரின் வருகைக்காக காத்திருந்தேன்.பொலிஸார் வந்து தமது கடமைகளை மேற்கொண்டனர், பொலிஸாருக்கு சம்பவம் தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றை அளித்தேன். நீதவான் எதிரிலும் முன்னிலையானேன்.

எனக்கு பிணை வழங்கப்பட்டது.பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு மரண விசாரணைளுக்கு வந்தேன். எனது அறிவுக்கு எட்டிய வகையில் இந்த விபத்து தவிர்க்க முடியாமல் ஏற்பட்டது ஒன்றாகும்.

அவ்வளவு துரித கதியில் இடம்பெற்று விட்டது.எனினும், நல்லதொரு பிரஜை என்ற ரீதியில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நியாயத்தை வழங்க வேண்டியது எனது கடமையாகும் என நுவான் குலசேகர தெரிவித்துள்ளார்.

நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான காற்று சீராக்கி பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த தினேஸ் அரவிந்த நிசாங்க என்பவரே இந்த வாகன விபத்தில் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

nuwan-kulasekara-0215

Related posts: