நியூசிலாந்தை மிரட்டிய வங்கதேசம்!

Monday, January 16th, 2017

நியூசிலாந்து- வங்கதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் வெல்லிங்டனில் நடைபெற்று வருகிறது. வங்கதேசம் முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 595 ஓட்டங்களை குவித்து டிக்ளேர் செய்தது.

ஷகிப்-அல்-ஹசன் இரட்டை சதமும் (217 ஓட்டங்கள்), முஷ்பீகுர் ரகீம் சதமும் (159 ஓட்டங்கள்) பெற்றுக்கொண்டனர். நியூசிலாந்து அணி சார்பில் நைல் வாக்னர் 4 விக்கட்டுகளையும், ட்ரென்ட் போல்ட், டிம் சவுத்தி ஆகியோர் தலா 2 விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்சிஸில் விளையாடிய நியூசிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 292 ஓட்டங்களை பெற்றிருந்தது. தொடக்க வீரர் டாம் லாதம் 119 ஓட்டங்களுடனும், நிக்கோலஸ் 35 ஓட்டங்கள் பெற்ற நிலையில் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 539 ஓட்டங்கள் எடுத்தது.

வங்கதேச அணி சார்பில் கம்ருள் இஸ்லாம் ரப்பி 3 விக்கட்டுகளையும், சுபாஷிஸ் ராய், ஷகிப்-அல்-ஹசன், மஹ்முதுல்லாஹ் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளையும், தஸ்கின் அஹமட் ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர்.

7 விக்கெட் மீதமுள்ள நிலையில் 66 ஓட்டங்களுடன் வங்கதேசம் இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகின்றது, 122 ஓட்டங்கள் நியூசிலாந்து பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (3)

Related posts: