ஆங்கிலத்தில் பேச சொன்னது ஏன்?  – டேவிட் வார்னர் !

Friday, October 20th, 2017

இந்திய வீரர் ரோஹித் சர்மாவை ஆங்கிலத்தில் பேச சொன்னது தொடர்பாக அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு இந்திய அணி அவுஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்றது. அப்போது அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கும் இந்திய வீரர் ரோஹித் சர்மாவிற்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.

அதில் ரோஹித், வார்னரை பார்த்து ஹிந்தியில் ஏதோ கூற அதற்கு வார்னர் ஆங்கிலத்தில் பேசுமாறு கூறினார், இந்த விடயம் பெரும் சர்ச்சைக்குள்ளானது. தற்போது வார்னர் அச்சம்பவம் குறித்து கூறுகையில், அப்போது ரோஹித் பேசியது எனக்கு புரியவில்லை. ஹிந்தியில் அது சாதாரண வார்த்தையாக இருந்திருக்கலாம்.

ஆனால் அது ஆங்கில உச்சரிப்பில் கெட்ட வார்த்தையாகும். கமெரா அவரது உதட்டசைவுகளை பார்த்து தவறாக எண்ணி விடக் கூடாது என்பதற்க்காக தான் அவரை ஆங்கிலத்தில் பேச சொன்னேன் என்றார்.

மேலும், இருவருக்கும் பொதுவான மொழி ஆங்கிலம் என்பதால் தான் அவரை ஆங்கிலத்தில் பேச சொன்னதாகவும், தான் மொழி வெறியன் இல்லை எனவும் கூறியிருக்கிறார்.

அந்த வார்த்தை என்ன என்பது பற்றி கூற மறுத்த வார்னர் பலமுறை இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: