சிம்பாபே போட்டியில் பங்கேற்றால் தென்னாபிரிக்காவுக்கெதிரான தொடரில் விளையாடுவது பாதிக்கப்படும் – மேத்யூஸ்!

Wednesday, October 26th, 2016

இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மத்தியூஸின் காலில், பல காயங்கள் காணப்படுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டமையைத் தொடர்ந்தே, சிம்பாப்வே அணிக்கெதிரான தொடரிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

சிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் குழாமில் சேர்க்கப்பட்டிருந்த மத்தியூஸ், பின்னர் அதிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். அவருக்குப் பதிலாக புதிய தலைவராக, ரங்கன ஹேரத் அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள அஞ்சலோ மத்தியூஸ், அவுஸ்திரேலியாவுக்கெதிரான தொடரில் தனக்கு ஏற்பட்ட காயத்திலிருந்து குணமடைவதற்காக, தனக்கு ஒன்றரை மாதங்கள் காணப்பட்டதாகவும், சிம்பாப்வே தொடரில் பங்குபற்றுவதற்குத் தயாராகி வந்ததாகவும் தெரிவித்தார்.

எம்.ஆர்.ஐ ஸ்கான் ஒன்றைச் செய்து பார்த்தோம். இதில், ஒரே காலில் பல காயங்கள் காணப்பட்டமை வெளிப்படுத்தப்பட்டது. மருத்துவ நிபுணர் குழு, என்னை சிம்பாப்வேக்கு அனுப்ப வேண்டாமென, எனக்கும் இலங்கை கிரிக்கெட் சபைக்கும் ஆலோசனை வழங்கியது. அவ்வாறு விளையாட வேண்டியேற்பட்டால், தென்னாபிரிக்காவுக்கெதிரான தொடரில் விளையாடும் வாய்ப்புகள் பாதிக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர் என்று குறிப்பிட்டார்.

201607031716279754_I-would-not-run-away-from-captaincy-Mathews_SECVPF

Related posts: