கிரிக்கட் சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை – தொல்பொருளியல் திணைக்களம்!

Tuesday, May 23rd, 2017

காலி மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அனுமதியற்ற சில நிர்மாண பணிகள் தொடர்பில் இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தொல்பொருளியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

காலி கோட்டை, உலக பாரம்பரிய சின்னமாக பெயரிடப்பட்டுள்ளது என அதன் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் சேனரத் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.இதன்படி அந்த பகுதியிலேயே இந்த மைதானம் உள்ளதுஇதனால் அந்த மைதானத்தில் நிர்ணமாணிக்கப்படும் 3 கட்டிடங்கள் தொடர்பில் இதற்கு முன்னர் இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டிருந்ததாக குறித்த பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளாகுறித்த நிர்மாண பணிகள் தொடர்பில் உலக பாரம்பரிய மத்திய நிலையமும் பரிசோதனை செய்துள்ளது

எனினும் அந்த அறிவுறுத்தலுக்கு அமைய ஒரு கட்டிடம் மாத்திரமே இலங்கை கிரிக்கட் நிறுவனத்தால் அகற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

Related posts: