அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் : 2-ஆவது சுற்றுக்கு செரீனா, கரோலினா தகுதி!
Wednesday, January 18th, 2017
மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் கிராண்ட்சலம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டி யில் செரீனா வில்லியம்ஸ், கரோலினா 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்னர்.
உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையும், அவுஸ்திரேலிய பகிரங்க பட்டத்தை 6 முறை வென்றவருமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) தொடக்க சுற்றில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த பெலின்டா பெனிக்கை எதிர்க்கொண்டார். இதில் செரீனா 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் 5-ம் நிலை வீராங்கனையான கரோலினா பிலிஸ்சோவா (செக்குடியரசு), 6-2, 6-0 என்ற நேர் செட் கணக்கில் சாராவை (ஸ்பெயின்) வீழ்த்தினார். 9-ம் நிலை வீராங்கனை ஜோகன்னா (இங்கிலாந்து) 21-ம் நிலை வீராங்கனை கரோலின் கார்சியா (பிரான்ஸ்), ஷபரோவா (செக்குடியரசு), மகரோவா (ரஷ்யா) ஆகியோர் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
உலகின் 3-ம் நிலை வீரரான மிலோஸ் ரோனிக் (கனடா) முதல் சுற்றில் ஜெர்மனியை சேர்ந்த டஸ்டின் பிரவுனை எதிர்க்கொண்டார். இதில் ரோனிக் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.மற்ற ஆட்டங்களில் 25-ம் நிலை வீரர் சிமோன் (பிரான்ஸ்), ராபின் ஹாஸ் (நெதர்லாந்து), ரோஜிரியா சில்வா (பிரேசில்), டொனால்டு யங் (அமெரிக்கா) ஆகியோர் வென்று 2-வது சுற்றில் நுழைந்தனர்.

Related posts:
|
|
|


