அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைவர் ராஜினாமா!

Friday, November 2nd, 2018

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த டேவிட் பீவெர், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த ஆண்டு நடந்த தென் ஆபிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில், அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பந்தை சேதப்படுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தினால் பான் கிராஃப்ட், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருக்கு அபராதத்துடன் கூடிய தடை விதிக்கப்பட்டது.

ஆனால், இந்த தடையை நீக்க வேண்டும் என அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரர்களுக்கான சங்கம் வலியுறுத்தி வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திற்கான தேர்தலில், டேவிட் பீவெர் 2வது முறையாக சேர்மனாக தெரிவு செய்யப்பட்டார்.

இந்நிலையில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்கு பொறுப்பேற்று, டேவிட் பீவெர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து தற்போது அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு பதிலாக இடைக்கால தலைவராக இயர்ல் எட்டிங்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்

Related posts: