அவர்கள் தரத்திற்கு நான் நிகரானவர் நான் இல்லை!

Tuesday, September 13th, 2016

உலகின் முதல்நிலை வீரரான நொவக் ஜோக்கோவிச்சைத் தோற்கடித்து கிரான்ட் ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளதன் மூலம் தான் நவீனகால டென்னிஸின் முன்னணி வீரர்கள் அளவுக்குத் வளரவில்லை என ஸ்டான் வவ்றிங்கா தெரிவித்துள்ளார்.

தனது தோல்வியின் பின்னர் கருத்துத் தெரிவித்த ஜோக்கோவிச், நவீனகால டென்னிஸின் முன்னணி வீரர்களாகக் கருதப்படும் ரொஜர் பெடரர், ரபேல் நடால், அன்டி மரே, தான் ஆகிய நால்வரடங்கிய குழுவைப் போன்று, பெரிய போட்டிகளை வெற்றிகொள்ளக்கூடிய ஒருவராக வவ்றிங்கா கருதப்பட வேண்டுமெனத் தெரிவித்தார்.

இறுதியாக இடம்பெற்ற 47 கிரான்ட் ஸ்லாம்களில் 42 கிரான்ட் ஸ்லாம்களை, இந்த நால்வரே வெற்றிகொண்டுள்ளனர். ஆரம்பத்தில் பெடரர், நடால் என இருந்த அந்தக் குழு, பின்னர் ஜோக்கோவிச் இணைந்து, மூவர் கொண்ட குழுவாக இருந்தது. அண்மைக்காலத்தில் அன்டி மரேயின் வெற்றிகளைத் தொடர்ந்து, அக்குழுவின் அங்கமாக மரேயும் கருதப்படுகிறார்.

ஆனால், மரேயும் வவ்றிங்காவும், தலா 3 கிரான்ட் ஸ்லாம்களை வென்றுள்ள நிலையில், அவரையும் அந்தக் குழுவில் சேர்க்க வேண்டுமென்றே கருதப்படுகிறது.

இதற்குப் பதிலளித்த வவ்றிங்கா, “நொவக் எப்போதும் என்னிடம் அன்பாக இருப்பார். அவரை நான் விரும்புகிறேன். அவர் சிறந்த நண்பன். என்னைப் பற்றி, நல்ல விடயங்களையே அவர் சொல்வார். பெரிய நால்வர், அவர்களிடமிருந்து ஏராளமான தூரத்தில் நான் உள்ளேன். அவர்கள் வென்றுள்ள தொடர்களைப் பாருங்கள், எவ்வளவு ஆண்களாக அவர்கள் விளையாடுகிறார்கள். நீங்கள் பார்த்தால், நான் மூன்று கிரான்ட் ஸ்லாம்களை வென்றுள்ளேன் தான். ஆனால், மாஸ்டர்ஸ் 1000 தொடர்களில் எத்தனையை மரே வென்றுள்ளார் என்று பாருங்கள்” என்று அவர் தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், “அவர்கள் வெல்வது மாத்திரமன்றி, ஒவ்வொரு முறையும் அரையிறுதிகளிலும் இறுதிப் போட்டிகளிலும் விளையாடியிருக்கிறார்கள். இதன் காரணமாகத் தான், அவர்களது இடத்தில் நான் இல்லை” என்று தெரிவித்தார்.

article_1473677392-LEAD-Champion-(5)wawofkikaisusa

Related posts: