கிறிஸ் கெய்ல் அதிரடி: இங்கிலாந்தை புரட்டிப்போட்டது மேற்கிந்திய தீவுகள்

Thursday, March 17th, 2016

டி20 உலகக் கிண்ணம் போட்டியின் லீக் பிரிவில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து ஆணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற மேற்கு இந்திய அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. இதையடுத்து இங்கிலாந்தின் துவக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் ஹால்ஸ் களமிறங்கினர். 15 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரஸ்ஸல் பந்தில் ஜேசன் ராய் ஆட்டமிழந்தார்.

பின்னர் ஹேல்சுடன் ரூட் இணைந்தார். இருவரும் அதிரடியாக ஆடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தனர்.

இந்நிலையில் 48 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ரூட் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஜோஸ் பட்லர் 20 பந்துகளில் 30 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அணித்தலைவர் மோர்கன் 14 பந்துகளில் 27 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களை எடுத்தது.

மேற்கிந்திய தீவுகள் தரப்பில் டுவைன் பிராவோ, ஆன்ட்ரே ரஸ்ஸல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இதையடுத்து 183 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி ஆடத்துவங்கியது.

துவக்க வீரர்களாக ஜான்சன் சார்லஸ் மற்றும் கிறிஸ் கெய்ல் களமிறங்கினர். சார்லஸ் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

பின்னர் இணைந்த சாமுவேல்ஸ் கெயில் இணை பொறுப்பாக விளையாடியது. சாமுவேல்ஸ் நிதானமாக ஆடினார்.

மறுமுனையில் கெயில் தனது ஆக்ரோசத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் சாமுவேல்ஸ் 37 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அப்போது அணியின் எண்ணிக்கை 57 ஓட்டங்களாக இருந்தது. பின்ன்னர் வந்த ராம்தின் 12 ஓட்டங்களிலும் பிராவோ 2 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

ஆனால் நங்கூரம் போல் நிலைத்து நின்ற கெயில் தனி ஆளாக அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

இறுதியில் 18.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 183 ஓட்டங்கள் எடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது.

கெயில் 47 பந்துகளில் 5 பவுண்டரி, 11 சிக்ஸர் உட்பட 100 ஓட்டங்கள் எடுத்து களத்தில் இருந்தார்

Related posts: