அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றதில் இலங்கை முதலிடம்!

Saturday, May 12th, 2018

டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் மற்றும் அதிக பந்துகள் மீதமிருந்த நிலையில் வென்ற அணிகள் பட்டியலில் இலங்கை முதலிடத்தில் உள்ளது.

கடந்த 2007-ஆம் ஆண்டு இலங்கை- கென்யா அணிகள் மோதிய டி20 போட்டியில் இலங்கை அணி 172 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றதே டி20 போட்டியில் அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாகும்.

கடந்த மாதம் நடைபெற்ற பாகிஸ்தான்- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையில் நடைபெற்ற டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 143 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது டி20 வரலாற்றில் இரண்டாவது பெரிய வெற்றியாகும்.

அதே போல இலங்கை- நெதர்லாந்து அணிகள் மோதிய போட்டியில் இலங்கை 90 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி பெற்றது, இது டி20 வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியாகும்.

அயர்லாந்து- கென்யா அணிகள் இடையிலான போட்டியில் அயர்லாந்து 76 பந்துகள் மீதமிருந்த நிலையில் வென்றது இரண்டாவது பெரிய வெற்றியாகும்

Related posts: