அணி 4 விக்கெட்டுகளால் இலங்கை வெற்றி!
Thursday, July 29th, 2021
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்திய அணி சார்பில் ஷிக்கர் தவான் 40 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் அகில தனஞ்சய 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
133 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா 40 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் குல்திப் யாதவ் 02 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Related posts:
இலங்கை கிரிக்கெட் ஒப்பந்தத்தை நிராகரித்தமை குறித்து மாலிங்க கருத்து!
வலைப்பந்தாட்ட போட்டிக்கு விண்ணப்பிக்குக!
தரவரிசை முதல் இடத்தை பிடித்தார் வோர்னர்!
|
|
|


