கெய்லின் அதிரடி சாதனைச் சதத்தோடு கன்னிக்கிண்ணத்தை சுவைத்த ரான்பூர் ரைடர்ஸ்!

Thursday, December 14th, 2017

பங்களாதேஷில் இடம்பெற்ற பங்களாதேஷ் பிரிமியர் லீக்கின் ஐந்ந்தாவது பருவகால போட்டிகளில் இறுதிப் போட்டியில் மஸ்ரபி மோட்ராசா தலைமையிலான ரான்பூர் ரைடர்ஸ் அணி கன்னிக்கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.

அதிரடி வீரர் கிறிஸ் கெயில் அதிரடியாக ஆடி சதமடித்து ரான்பூர் ரைடர்ஸ் அணி கிண்ணத்தை வெல்ல பெருந்துணையாக இருந்தார்.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற டாக்கா டைனமைட்ஸ் களத்தடுப்பை தெரிவு செய்தது, இதனடிப்படையில் முதலில் துடுப்பாடிய ரான்பூர் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் ஒரேயொரு விக்கெட்டை மட்டும் இழந்து 206 ஓட்டங்கள் பெற்றுக்கொண்டது. போட்டியில் டாக்கா டைனமைட்ஸ் அணியின் பந்துவீச்சை துவசம் செய்த கெயில் 18 சிக்ஸர்கள் 5 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக ஆட்டம் இழக்காது 69 பந்துகளில் 146 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். கெயிலின் 20வது T20 சதம் என்பதும் குறிப்பிடத்தக்கது. T20 போட்டிகள் வரலாற்றில் ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்கள் எனும் சாதனையையும் கெயில் தன்வாமாக்கினார். பந்துவீச்சைப்பொறுத்தவரை சகிப் அல்கசன் மட்டுமே வீழ்த்தப்பட்ட ஒரு விக்கட்டைக்கைப்பற்றினார். சுனில் நரைன் தவிர்த்து ஏனைய வீரர்கள் ஓவருக்கு 10ற்கு அதிகமான ஓட்டங்களை வழங்கியிருந்தார்கள்.

 இமாலைய இலக்கான 207 என்ற இமாலய வெற்றி இலக்கை கொண்டு துடுப்பாடிய சாகிப் அல் ஹசன் தலைமையிலான டாக்கா  டைனமைட்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்களை மட்டுமே பெற்று 57 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது. பந்துவீச்சில் இசுறு உதான, ரவி போப்பரா, மற்றும் சொகேக்காசி தலா 2 விக்கட்டுகளை கைப்பற்றினார்கள்.

போட்டியில் 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ரான்பூர் ரைடர்ஸ் அணி இந்தாண்டுக்கான பங்களாதேஷ்பிரிமியர் லீக்க்கின் ஐந்தாவது பருவகால சம்பியன்களாக முடிசூசிக்கொண்டார்கள். ஆட்டநாயகனாகவும், தொடரின் ஆட்டநாயகனாகவும் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் விருதை தட்டிச்சென்றார். இந்த கிண்ணம் ரான்பூர் ரைடர்ஸ் அணிக்கு கன்னி கிண்ணமாகும்.

Related posts: