iPhone 8 கைப்பேசி தொடர்பில் புதிய தகவல் வெளியானது!

Tuesday, November 15th, 2016

முன்னணி ஸ்மார்ட் கைப்பசி வடிவமைப்பு நிறுவனமான ஆப்பிள் சில மாதங்களுக்கு முன்னர்தான் iPhone 7 மற்றும் iPhone 7 Plus ஆகிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தது.

அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட்டிருந்த இக் கைப்பேசிகளுக்கு தொடர்ந்தும் நல்ல மவுசு காணப்படுகின்றது.இந் நிலையில் அடுத்த வருடம் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யக் காத்திருக்கும் iPhone 8 மற்றும் iPhone 8 Plus ஆகிய கைப்பேசிகளின் வடிவம் எப்படியிருக்கும் என்ற தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி இக் கைப்பேசிகளின் தொடுதிரையானது வலது, இடது புறங்களின் முழுப் பகுதிக்கும் (Bezel Free) பரந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தொடுதிரையின் பரப்பளவு சற்று அதிகரித்திருக்கும்.அதாவது iPhone 8 இன் தொடுதிரையானது 5 அங்குலமாகவும், iPhone 8 Plus இன் திரையானது 5.8 அங்குலமாகவும் அதிகரிக்கும்.தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள iPhone 7 மற்றும் iPhone 7 Plus ஆகியவற்றின் தொடுதிரைகள் முறையே 4.7 அங்குலமாகவும், 5.5 அங்குலமாகவுமே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (6)

Related posts: