விரைவில் பாவனைக்கு வருகிறது கூகுலின் அன்ராய்ட் கை கடிகாரம்!

Sunday, December 25th, 2016

அடுத்த வருடத்தின் தொடக்கப்பகுதியில் கூகுள் நிறுவனம் புதிய தொழிநுட்பத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள அன்ராய்ட் கடிகாரங்களை அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

கூகுள் ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு தொழிநுட்ப சாதன அறிமுகத்தை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையிலேயே தற்போது நடைமுறையில் உள்ள அன்ரோய்ட் தொலைபேசிகளில் பயன்படுத்தப்படும் அன்ரோய்ட் ஒஎஸ் எனும் மென் பொருள் மூலம் குறித்த கடிகாரத்திற்கான தொழிநுட்ப செயற்பாடுகளை இயக்கியுள்ளது.

இருப்பினும் குறித்த கடிகாரத்தை கூகுள் நிறுவனம் தயாரிக்கவில்லையாம். பதிலாக மூன்றாம் நிலை நிறுவனம் தயாரிக்குமெனவும், குறித்த கடிகாரத்திற்கு கூகுள் மென் பொருள் வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதோடு தொடு திரை வசதிகளுடன் சில செயலிகளை தயாரிக்கவும் உதவுகிறதாக கூகுளிற்கான அன்ராய்ட் உற்ப்த்திகளுக்கான முகாமையாளர் செப் ஜாங் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கிடையில் குறித்த கடிகாரத்தை சந்தைக்கு கொண்டு வருவதற்கு கூகுள் திட்டமிட்டுள்ளது. குறித்த கடிகாரமானது 2.0 அன்ராய்ட் செயலிகளை கொண்டுள்ள தோடு குரல் கட்டுபாட்டிற்குட்பட்டதாகவும், அன்ராய்ட் போன்கள் மற்றும் அப்பிள் தொலைபேசிகளில்; சில செயற்பாடுகளுக்கு கட்டுப்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கூகுளின் உற்பத்திகளான அன்ராய்ட் தொலைபேசிகள், கூகுள் பிக்ஸல் என்பன பாவனையில் வெற்றி கண்டுள்ள நிலையில் கூகுள் நிறுவனத்தின் உத்தரவாத்தில் வரும் கூகுல் அன்ராய்ட் கை கடிகாரம் இற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்து வருகின்றது.

FotorCreated-605

Related posts: