புதிய ஐபோன்கள் அறிமுகம்!

Thursday, September 13th, 2018

உலகின் முன்னணி மின்னணு சாதனங்கள் உற்பத்தி நிறுவனமான ஆப்பிள் , புதிய ஐபோன் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி ஐபோன் 8 மற்றும் ஐபோன் எக்ஸ் ஆகிய ஸ்மார்ட் போன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்தாண்டும் ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபோன் வெளியீட்டு விழா கலிபோர்னியாவில் அந்நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெற்றது. நவீன காலத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறை படைப்புகள் அறிமுகப்படுத்தப் பட்டன. இதன்படி நவீன தொழில்நுட்பத்துடன் வரும் 3 ஐபோன்களில் டூயல் சிம் பயன்படுத்திக் கொள்ளலாம். பட்ஜெட் ஐபோனாக கருதப்படும் ஐபோன் 10R ஒரே ஒரு பின்புற கேமராவுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 மாடலில் முற்றிலும் புதிய வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய எஸ்4 சிப்செட், இ.சி.ஜி. பரிசோதனை செய்யும் வசதிகளை புதிய வாட்ச் கொண்டுள்ளது. புதிய வாட்ச் மாடலில் முற்றிலும் புதிய எட்ஜ்-டு-எட்ஜ் வளைந்த டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலை விட 30% பெரிது என ஆப்பிள் தெரிவித்துள்ளது

Related posts: