எகிப்து கிசா மிரமிட்டில் இரு மர்ம துவாரங்கள்!

Thursday, October 20th, 2016

 

எகிப்து கிசா பிரமிட்டில் முன்னர் அறியப்படாத இரு துவாரங்கள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 4,500 ஆண்டுகள் பழைமையான கட்டுமானத்தை ஊடுகதிர் படமெடுப்பு கருவி மூலம் ஆராய்ந்தபோதே நிபுணர்கள் இந்த மர்மமான துவாரங்களை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த வழக்கத்துக்கு மாறான துவாரங்கள் இருப்பதை உறுதி செய்த எகிப்து தொல்பொருள் அமைச்சு, அது தொடர்பில் மேலும் ஆய்வுகளை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக குறிப்பிட்டது.

480 அடி உயரம் கொண்ட கிசாவின் பெரிய பிரமிட், கூபு அரசரால் கட்டப்பட்டதாகும். பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. எகிப்தில் இருக்கும் ஏனைய பிரமிட்டுகள் போன்று பாரோவின் கல்லறையுடன் கிசா பிரமிட்டில் அறியப்பட்ட மூன்று அறைகள் உள்ளன.

ஒரு துவாரம் பிரமிட்டின் வடக்கு பக்கம் மறைந்திருப்பதோடு மற்றொரு துவாரம் பிரமிட்டின் வடகிழக்கு பக்கவாட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

“இவ்வாறான துவாரம் போன்ற வடிவமைப்பு பிரமிட்டின் உள் நோக்கி அழைத்துச் செல்வதாக இருக்கும்” என்று பாரம்பரிய கண்டுபிடிப்புகள் தொடர்பான ஆய்வகத்தின் நிறுவனர் மஹ்தி தயுபி விளக்கியுள்ளார்.

coltkn-10-20-fr-01154545799_4890205_19102016_mss_cmy

Related posts: