ஓடும் ரெயிலில் 5ஜி இணைய சேவை சாம்சங் அதிரடி!

Thursday, December 14th, 2017

ஓடும் ரெயிலில் அதிவேக 5G இண்டர்நெட் சேவையை நடைமுறைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் தற்போது சாம்சங் ஈடுபட்டுள்ளது.

இதன் முன்னர் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் பிரயாணம் செய்யக்கூடிய ரயிலில், நொடிக்கு 1.7GB இணைய வேகத்தை பெறும் பரீச்சாத்த நடவடிக்கை வெற்றிபெற்றது.

இந்த பரீச்சாத்த நடவடிக்கை கடந்த அக்டோபர் 17 முதல் 19 வரை, டோக்கியோ அருகில் உள்ள சைதமா நகரில் நடத்தப்பட்டன. சாம்சங் நிறுவனத்தின் 5G இணைய சேவை பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த பரீச்சாத்த நடவடிக்கையின் போது 5G CPE Router, ரேடியோ சேவை (5G Radio), Virtual RAN உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டன.

சோதனையின் போது 8k காணொளி தரவிறக்கம் செய்யப்பட்டதோடு 4k காணொளி தரவேற்றம் செய்யப்பட்டது. 5G இணைய சேவையின் புதிய பரிணாமமாக கருதப்படுகின்றது.

2018ம் ஆண்டளவில் 5G மொபைலை அற்முகப்படுத்த பல முன்ணணி நிறுவங்கள் ஆயத்தமாகிவரும் நிலையில், சாம்சங் ஒரு படி மேலே சென்று ஓடும் ரெயில் 5ஜி தொழில்நுட்ப இணைய சேவையை முன்னெடுத்துள்ளது.

Related posts: