எரிமலை சீற்றம் – மக்களை அவதானமான இருக்குமாறு எச்சரிக்கை!

Saturday, October 1st, 2016

பசுபிக் கண்டத்தின் நெருப்பு வளையத்தின் ஒரு பகுதியாக மெக்சிகோவில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள கொலிமா எனும் எரிமைலை நேற்று வெள்ளிக்கிழமையிலிருந்து தீ பிழம்புகளை கக்க ஆரம்பித்துள்ளது.

இதனால் அந்தப்பகுதியில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.மெக்சிகோவின் கொலிமா எரிமலையினால் வெளியிடப்பட்ட புகையினாலும் சாம்பல்களினாலும்  வான்பரப்பு முழுவதும் மூடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் சாம்பல் மற்றும் புகையுடன் சேர்த்து, தீப்பிழம்புகளையும் கொலிமா எரிமலை கக்க ஆரம்பித்துள்ளதால் எந்நேரமும் வெடிக்கலாம் என அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.குறித்த எரிமலையில் இருந்து நெருப்புக்குழம்புகள் வெளிவரும் தன்மை அதிகரித்துள்ளது. குறித்த எரிமலையில் இருந்து வெளியேறும் சாம்பல் மற்றும் புகைகள் தெற்கு பகுதியை நோக்கி நகர்ந்து வருகின்றன. மெக்சிகொவில் மாத்திரம் சுமார் 3000 வரையான எரிமலைகள் காணப்படுகின்றன.

எனினும் அவற்றில் இயங்கு நிலையில் இருப்பவையாக 14 எரிமலைகள் இனங்காணப்பட்டுள்ளன.இந்த கொலிமா எரிமலை முதன் முறையாக 1986 ஆண்டு வெடித்திருந்தது அதன் பிறபு இதுவரை அவ்வப்போது புகையை வெளிவிடுவதும் அடங்குவதுமாக இருந்து வந்த நிலையில் தற்போது தீ பிழம்புகளை வெளியிட ஆரம்பித்துள்ளது.

இதுவரை மெக்சிகோவின் வரலாற்றில் 1953 ஆம் ஆண்டு மிச்சோகனில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பும் 1982 ஆண்டு தகான எரிமலையில் ஏற்பட்ட வெடிப்பும் பாரிய எரிமலை வெடிப்புச் சம்பவங்களாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 download

Related posts: