5ஜி தொழில்நுட்பட்பத்தை வெற்றிகரமாக பரிசோதித்தது கனடா!
Thursday, August 4th, 2016
கனடாவின் மிசிசாகாவில் உள்ள பெல் நிறுவனம், நோக்கியா நிறுவனத்துடன் இணைந்து ஐந்தாம் தலைமுறைக்கான 5G தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
இதன் மூலம், கனடாவின் தற்போதைய சராசரி இணையதள (4G) வேகத்தைவிட ஆறு மடங்கு இணையதள வேகம் அதிகரிக்கும், கனெக்டிவிட்டி பிரச்னைகள் பெரிய அளவில் 5ஜியில் குறைக்கப்படும் என உறுதி அளிக்கிறார்கள் பெல் நிறுவனத்தினர்.
அப்போது அலைக்கற்றை 73 GHz ஆகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் தங்களின் இலக்கை வெற்றிகரமாக அடைந்ததாகவும் அறிவித்துள்ளனர்.இதுகுறித்து, கருத்து தெரிவித்துள்ள பெல் நிறுவனம், ‘இந்த ஆராய்ச்சியானது அடுத்த தலைமுறைக்கான இணையதள வேகத்தை உறுதி செய்யும் NGMN கூட்டமைப்பின் குறிக்கோள்களை 2020ம் ஆண்டுக்குள் அடைந்திட வழி வகுக்கும்.
இன்னும், பல்வேறு கட்ட ஆராய்ச்சிகள் தேவைப்படுவதால், இந்த 5ஜி தொழில்நுட்பம் நடைமுறைக்கு வருவதற்கு குறைந்தது 5 முதல் 7 ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகிறது
Related posts:
|
|
|


