எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு எரிகற்கள் மழைவீழ்ச்சியை தெளிவாக பார்வையிட முடியும் ..!

Sunday, December 13th, 2020

இலங்கை மக்களால் எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு எரிகற்கள் மழைவீழ்ச்சியை தெளிவாக பார்வையிட முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இன்றும் நாளையும் இதனை இலங்கையின் வான்பரப்பில் காணமுடியும் என ஆதர் சி கிளார்க் நிறுவகம் தெரிவித்துள்ளது.

இந்தமுறை மணிக்கு 130 எரிகற்கள் அளவில் வீழ்வது இலங்கை வான்பரப்பில் தெளிவாக காட்சியளிக்கும் என்பதோடு இவை பல வண்ணங்களில் பயணிக்கும் என்பதாலும்,

இதற்கு ஜெமினிட்ஸ் எரிகல்வீழ்ச்சி என்று பெயரிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வாள் நட்சத்திரங்கள் விட்டுச்சென்ற துகல்களின் வழியே புவி பயணிக்கும் போது இந்த காட்சிகள் தென்படும்.

எரிகற்களானது மணித்தியாலயத்திற்கு ஒரு இலட்சத்து 35 ஆயிரம் கிலோமீற்றர் வேகத்தில் விழும் என குறிப்பிடப்படுகிறது.

எனவே இன்றும் நாளையும் இந்த எரிகற்கள் மழைவீழ்ச்சியினை பார்வையிட முடியும் என விண்ணாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் இந்த எரிகற்கள் நேரடியாக பூமியில் விழாது என்றும் அதனால் ஆபத்துகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு 9 மணிக்குப் பின்னர் கிழக்கு வானிலும், நள்ளிரவில் தலைக்கு மேலான வான்பரப்பிலும், அதிகாலைப் பொழுதில் சூரியன் உதிப்பதற்கு முன்னர் மேற்கு வானிலும் இதனை தெளிவாக காண முடியும்.

Related posts: