கூகுள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்!

Saturday, November 12th, 2016

ஆன்ட்ராய்டு இயங்குதளங்களில் கூகுள், தன்னுடைய சொந்த செயலிகளை அதிகளவு விளம்பரப்படுத்துவதாக ஐரோப்பிய கட்டுப்பாட்டாளர்கள் குழு குற்றம் சுமத்தியது.

இந்த குற்றச்சாட்டுக்கு கூகுள் நிறுவனம் தற்போது விளக்கமளித்துள்ளது. அதில், ஐரோப்பிய கட்டுப்பாட்டாளர்கள் குழுவின் குற்றச்சாட்டின் மூலகாரணமே ஆப்பிள் iOs-வுடன் ஆன்ட்ராய்ட் இயங்குதளங்கள் போட்டி கிடையாது என்பது தான். ஆனால் நாங்கள் அதை அப்படி பார்க்கவில்லை.

உங்கள் குழு எடுத்த ஆய்விலேயே ஆப்பிளுக்கு சரியான போட்டி ஆண்ட்ராய்ட் தான் 89 சதவீதம் நிருபணம் ஆகியுள்ளது.

எங்களுடைய செயலிகளை ஆன்ட்ராய்ட் போனில் ஏற்றும் விடயத்துக்கு எந்த ஆண்ட்ராய்ட் போன்கள் தயாரிக்கும் நிறுவனமும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.

இது ஆன்ட்ராய்டில் மட்டுமல்லாமல் ஆப்பிள் ஐபோன்கள், விண்டோஸ் போன்கள் என எல்லாவற்றிலும் இருக்கிறது என விளக்கம் அளித்துள்ளது.இந்த விடயத்தில் கூகுள் மீது தவறு என நிருபணமானால் $7.4 பில்லியன் அளவு நஷ்டஈடு தரப்பட வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.500.400.194.800.668.160.90

Related posts: