10 இலட்சம் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்!

Sunday, April 8th, 2018

தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் கருத்துக்கள் வெளியிட்ட 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட டுவிட்டர் கணக்குகளை முடக்கியுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் டுவிட்டர் நிறுவனம், தீவிரவாதத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்களின் கணக்குகளை முடக்கி வருகிறது. கடந்தாண்டு ஜீலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 2 இலட்சத்து 74 ஆயிரத்து 460 கணக்குகளை டுவிட்டர் முடக்கியுள்ளது.

டுவிட்டரில் தீவிரவாதிகள் வன்முறைத் தாக்குதல்களுக்கு அழைப்பு விடுக்கும் போது உலகம் முழுவதுமுள்ள அரசாங்கங்களின் அழுத்தத்திற்கு ஆளாக்கப்பட்ட நேரத்திலும் நல்ல கருத்துக்கள் பரிமாற்றத்துக்காக இலவச திறந்த தளம் பராமரிக்கப்பட்டு வந்தது.

கடந்த ஆறு மாதத்தில் 93 சதவீத டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டது. இதில் 74 சதவீதத்தினர் தங்களின் முதல் டுவிட்டிற்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு முடக்கப்பட்டதாக டுவிட்டர் தெரிவித்துள்ளது.

வன்முறையைத் தூண்டும் விதமாகவும் தீவிரவாதத்துக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டதாலும் இந்தக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts: