வானில் இருந்து எரிந்த நிலையில் விழுந்த மர்ம பொருள்: தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு!

Thursday, November 3rd, 2016

ஒட்டன்சத்திரம் அருகே வானில் இருந்து எரிந்த நிலையில் மர்ம பொருள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அது விமானத்தில் இருந்து விழுந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதுகுறித்து தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கூத்தம்பூண்டி பஞ்சாயத்து மோதுப்பட்டி கிராமம் களத்துககாட்டு தோட்டத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவருடைய தோட்டத்தில் நேற்று மதியம் வானத்தில் இருந்து எரிந்த நிலையில் மர்ம பொருள் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் பலத்த சத்தம் கேட்டுள்ளது.

அதை கேட்டதும் அருகில் தோட்டத்து வீட்டில் இருந்த சிவகாமி என்பவர் ஓடிச்சென்று அந்த பொருளை பார்த்தார். அப்போது அந்த பொருள் பாதி எரிந்த நிலையில் இருந்தது. அலுமினிய உருளையில் வயர்களை சுற்றி இருந்ததுபோல் அந்த பொருள் காணப்பட்டது. இதைப்பார்த்து ஆச்சரியமடைந்த சிவகாமி, அக்கம்பக்கத்தினரிடம் தெரிவிக்கவே, அவர்களும் ஆர்வத்துடன் வந்து அந்த பொருளை பார்த்தனர்.

பின்னர் இதுபற்றி கள்ளிமந்தையம் போலீஸ் நிலையத்திற்கு சிவகாமி தகவல் கொடுத்தார். அதையடுத்து ஒட்டன்சத்திரம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா, கள்ளிமந்தையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த பொருளை கைப்பற்றி பார்வையிட்டனர்.

பின்னர் இதுகுறித்து மதுரையில் உள்ள தடய அறிவியல் துறைககு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மதுரை தடய அறிவியல் உதவி இயககுனர் பாஸ்கரன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து அந்த பொருளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதுகுறித்து பாஸ்கரன் கூறும்போது, இந்த மர்ம பொருள் விமானத்தில் இருந்து விழுந்து இருககலாம் என்றார். பின்னர் திண்டுககல்லில் இருந்து வெடிகுண்டு நிபுணர் மாணிககம் தலைமையிலான குழுவினர் மற்றும் மோப்ப நாய் மேகஸ் வரவழைககப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.இந்த மர்ம பொருளால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. மேலும் ஏராளமான பொதுமக்களும் கூட்டமாக வந்து அதை பார்த்து சென்றனர்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினயிடம் கேட்டபோது, ‘ஒட்டன்சத்திரம் அருகே வானில் இருந்து மர்ம பொருள் விழுந்துள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்த தடய அறிவியல் நிபுணர்கள், தாழ்வாக பறந்த ஒரு விமானத்தில் இருந்து அந்த பொருள் விழுந்து இருக்கலாம் என தெரிவித்தனர். இதை உறுதி செய்ய அருகே உள்ள விமான நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தரும் பதிலை வைத்துதான், அந்த மர்ம பொருள் விமானத்தில் இருந்து விழுந்ததா? என்பது தெரியவரும்’ என்றார்.

ranil-0-0-450x251 copy

Related posts: