9 கின்னஸ் சாதனைகளை தன்வசமாக்கிய ஆழிக்குமரன்!

Sunday, October 16th, 2016

பல விதமான வீர செயல்கள், விளையாட்டுகள் மூலம் ஒன்பது கின்னஸ் சாதனைகள் படைத்த வீரர் தான் வல்வையின் விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தன்.

இவர் நீச்சல் போட்டிகளில் செய்த சாதனைகளை பாராட்டிய சிவநாயகம் என்னும் ஆசிரியர் இவருக்கு ’ஆழிக்குமரன்’ என்னும் பட்டத்தை வழங்கி சிறப்பித்தார்.இளம் வயதிலேயே ஆழிக்குமரன் ஆனந்தன் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும் நீச்சல், நீரில் மிதத்தல், நடனம் என பல துறைகளில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

லண்டன் பல்கலைகழகத்தில் விஞ்ஞான பட்டதாரி பட்டத்தையும், இலங்கை சட்டமானி பட்டத்தையும் பெற்றுள்ளார்.

ஆங்கில கால்வாயை நீந்தி கடக்கும் சாதனையில் ஆறு மணி நேரத்துக்கும் மேலே ஆனந்தன் ஈடுபட்டிருந்த போது சாதகமற்ற நீரோட்டத்தாலும், நீரின் குறைந்த வெப்பநிலையிலும் பாதிக்கப்பட்ட இவர் 1984 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் திகதி மரணமடைந்தார்.

இவர் படைத்துள்ள ஒன்பது கின்னஸ் சாதனைகள் வருமாறு

*பாக்கு நீரினணையை 51 மணி நேரத்தில் நீந்தி கடந்தது (1971)
*128 மணி நேரம் தொடர்ச்சியாக டிவிஸ்ட் நடனம் ஆடியது (1978)
*1487 மைல் தூரத்தை 187 மணி நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் கடந்தது (1979)
*33 மணி நேரம் ஒற்றை காலில் நின்றது (1979)
*136 மணி நேரம் பால் பன்சிங் செய்தது (1979)
*இரண்டு நிமிடத்தில் 165 தடவை Sit ups செய்தது (1980)
*9100 தடவை High Kicks செய்தது (1980)
*நடந்தே 296 மைல் தூரத்தை 159 மணி நேரத்தில் கடந்தது (1981)
*80 மணி நேரம் தொடர்ச்சியாக தண்ணீரில் செங்குத்தாக நின்றது (1981)

alekumarn

Related posts: