300 ஆண்டுகளுக்கு பின் சிறுமியின் சடலம் திடீரென கண் விழித்தது!

Monday, September 26th, 2016

மெக்ஸிகோ நாட்டில் 300 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த சிறுமியின் சடலம் ஒன்று திடீரென கண் விழித்து பார்த்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெக்ஸிகோவில் உள்ள ஜலிஸ்கோ நகரில் கூதலஜாரா  என்ற ஆலயத்தில் 300 ஆண்டுகளுக்கு முன்னர் தந்தையினால் கொலைசெய்யப்பட்ட  இனசென்சியா என்ற சிறுமியின் சடலம் இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

300 ஆண்டுகளுக்கு முன்னர் மெக்ஸிகோவில் இச்சிறுமி வாழ்ந்து வந்துள்ளார்.அப்போது, இயேசுவின் மீது கொண்டுள்ள பக்தியால் அவரை பற்றி மக்களுக்கு போதனை செய்ய தனது தந்தையிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆனால், அவரது தந்தை அதற்கு மறுத்துள்ளார்.

எனினும், தந்தையின் எதிர்ப்பை மீறி சிறுமி போதனை செய்தமையால் ஆத்திரமடைந்த தந்தை சிறுமியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.இயேசுவின் மீதுள்ள பக்தியை கண்டு மகிழ்ந்த கூதலஜாரா  ஆலயத்தின் குருவானவர்கள் சிறுமியின் சடலத்தினை ஆலயத்திற்கு கொண்டு வந்து அச்சிறுமியின் சடலம் அழிவடையாமல் இருக்க மெழுகு வஸ்த்துக்களை பூசி இன்றுவரை பாதுகாத்து வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் இந்த தேவாலயத்திற்கு சுற்றுலா பயணிகள் சென்றவேளையில் நபர் ஒருவர் சிறுமியின் சடலத்தை வீடியோ எடுத்துள்ளார்.

அப்போது, சிறுமியின் சடலம் திடீரென கண் விழித்து பார்த்ததுள்ளது. இதை கண்ட அந்நபர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு மில்லியன் கணக்கில் மக்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.

இது மூடநம்பிக்கை என சிலர் கருத்து தெரிவித்தாலும், சிறுமியின் சடலம் எதையோ உணர்த்த தனது கண்களை திறந்துள்ளதாக சிலர் நம்புகின்றனர்.

38BF76B200000578-3805486-image-m-56_1474730344543

Related posts: