ஜூலை 31ல் சூரியனுக்கு விண்கலம் –  நாசா!

Tuesday, April 10th, 2018

சூரியனை ஆய்வு செய்வதற்காக, ஜூலை 31இல், விண்கலம் விண்ணில் செலுத்தப்படும்’ என, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான, ‘நாசா’ அறிவித்துள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியில், பல சாதனைகளுடன் முன்னணியில் இருப்பது நாசா. தற்போது, முதன்முதலாக சூரியனை ஆய்வு செய்வதற்கு, ‘பார்கர் சோலார் புரோப்’ விண்கலத்தை, நாசா உருவாக்கியுள்ளது; இதை விண்ணில் செலுத்துவற்கான தேதி, நேற்று அறிவிக்கப்பட்டது.

புளோரிடாவின் கென்னடி ஏவுதளத்தில் இருந்து, இந்த விண்கலம், ஜூலை, 31ல் அனுப்பப்பட உள்ளது. இது, 1,400 டிகிரி செல்ஷியஸ் வரையிலான வெப்பத்தை தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது சூரியனின் மேற்பரப்பில் இருந்து, 59.5 லட்சம், கி.மீ. துாரத்தில் நின்று, ஆய்வில் ஈடுபடும்.

சூரியனின் வளிமண்டலத்தின் வெப்பநிலை போன்ற விஷயங்களை ஆய்வு செய்வதே இதன் நோக்கம். சூரிய வெப்பத்தில் இருந்து, விண்கலத்தை பாதுகாக்கும் விதமாக, வெப்ப கவசம், இதில் பொருத்தப்பட்டுள்ளது.

இதற்கு முதலில், ‘சோலார் புரோப் பிளஸ்’ என, பெயரிடப்பட்டிருந்தது பின், அமெரிக்க ஆராய்ச்சியாளர், யூஜின் பார்கரை கவுரவப்படுத்தும் விதமாக, இதற்கு, ‘பார்கர் சோலார் ப்ரோப்’ என, பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

Related posts: