வெளிச்சக்தி ஏதுமின்றி செயற்படும் நுண்ணுயிர் எரிபொருள் கண்டுபிடிப்பு!

Thursday, July 7th, 2016

முதன் முறையாக விஞ்ஞானிகள் மின்சாரத்தை உருவாக்கும், வெளிச்சக்தி ஏதுமின்றி செயற்படக்கூடிய நுண்ணுயிர் எரிபொருள் கலம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

இதன் மூலம் இனிவரும் காலங்களில் பக்டீரியாக்களை கொண்டு தேவையான மின்சாரத்தை உருவாக்க முடியும் என சொல்லப்படுகிறது.

நுண்ணுயிர் எரிபொருள் கலமானது பக்டீரியாக்களின் செயற்பாட்டை பயன்படுத்தி உணவிலுள்ள இரசாயன சக்தியை உடைத்து இலத்திரன்களை வெளியேற்றுகின்றது.

இவ் வெளியேற்றப்பட்ட இலத்திரன்கள் பின்னர் மின் சக்தியாக மாற்றப்படுகிறது.ஆனாலும் தொடர்ச்சியாக உணவு வழங்கலை உறுதிப்படுத்துவதற்கு, அதற்கான உணவு செலுத்தப்பட வேண்டியுள்ளது.

உணவு வழங்கல் நிறுத்தப்படும் போது இலத்திரன்கள் பிறப்பிக்கப்படுவதும் நிறுத்தப்படுகிறது. இதற்கென இதுவரை காலமும் வெளிவாரியாக சக்தியை பிரயோகிக்க வேண்டிய தேவை இருந்து வந்தது.

தற்போது Iowa State பல்கலைக்கழக குழுவொன்று 3D paper fuel cell ஒன்றை உருவாக்கியுள்ளது. இங்கு தானாகவே உணவு வழங்கல் நடைபெறுகிறது. இங்கு potassium ferricyanide எனும் இரசாயனம் உணவாக வழங்கப்படுகிறது.

இதன் மூலம் வெளிவாரியான சக்தியின்றி தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு மின்சாரத்தை பிறப்பிக்க முடிந்ததாக தெரியவருகிறது. இவ் நுண்ணுயிர்கலத்தின் தொழிற்பாடு சாதாரண பற்றரியின் தொழிற்பாட்டை ஒத்தது.

இங்கு மின்பகு பொருளாக Shewanella Oneidensis MR-1 எனும் பக்ரீரியாவும், potassium ferricyanide உம் தொழிற்படுகிறது. இது தொடர்பான விபரங்கள் TECHNOLOGY தொடர்பான ஆய்வுப் பத்திரிகையொன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts: