புளூட்டோ ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Friday, June 1st, 2018

புளூட்டோவில் சக்தி வாய்ந்த மீதேன் உறைநிலைக் குன்றுகள் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக, விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இவ்வாறான குன்றுகள் உருவாவதற்கு கடுமையான காற்று வீசும் மண்டலம் ஒன்று காணப்பட வேண்டும்

இதற்கு முன்னர் புளூட்டோ தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அவ்வாறான காற்று மண்டலம் எதுவும் அடையாளம் காணப்படவில்லை.

ஆனால் தற்போது குறித்த மீதேன் குன்றுகள் அவதானிக்கப்பட்டுள்ள இடம் மிக வேகமாக காற்றுவீசும் சுற்றாடலைக் கொண்ட பரப்பாக இருக்கலாம் என்றும், அங்கு செக்கனுக்கு 10 மீற்றர் என்றவேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

Related posts: