வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது இந்தியாவின் GSAT-18 செயற்கைக்கோள் !

தகவல் தொடர்பிற்காக இந்தியா தயாரித்துள்ள ஜிசாட் 18 (GSAT-18) செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
1000 கோடி ரூபா செலவில் இந்தியாவின் இஸ்ரோ உருவாக்கியுள்ள ஜிசாட் 18 செயற்கைக்கோள் 3,404 கிலோ எடை கொண்டது.
40 தகவல் தொடர்பு டிரான்ஸ்பொன்டர்கள் பொருத்தப்பட்ட ஜிசாட் செயற்கைக்கோள் இன்று அதிகாலை 2 மணி அளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.தென் அமெரிக்க நாடான பிரஞ்ச் கயானாவில் இருந்து ஏரியன் ஸ்பேஸ் ரொக்கெட் மூலம் ஜிசாட் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. ஜிசாட் 18 செயற்கைக்கோளை நேற்று அதிகாலை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இருப்பினும், கயானாவில் காற்றின் வேகம் அதிகரித்து மோசமான வானிலை ஏற்பட்டதால் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவது 24 மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த செயற்கைக்கோளுடன் தகவல் தொடர்பு சேவைக்காக இந்தியா 15 செயற்கைக்கோள்களை ஏவவுள்ளது.
Related posts:
|
|