தொலைந்த மொபைலில் தகவல்களை அழிப்பது எப்படி?

Wednesday, October 25th, 2017

ஸ்மார்ட்போன் தொலைந்து போனால் கூட அதில் உள்ள புகைப்படங்கள், வங்கி சார்ந்த தகவல்கள் போன்ற பல முக்கியமான தகவல்களை எளிதில் அழித்து விடலாம். அதற்கான வழிமுறைகள் இதோ முதலில் android.com/find என்ற தளத்திற்கு செல்ல வேண்டும்.உங்களது கூகுள் அக்கவுன்ட்டில் சைன் இன் (Sign in) செய்ய வேண்டும்.அதில் நீங்கள் பயன்படுத்திய சாதனங்களின் பட்டியலை பார்க்க முடியும். ஒருவேளை ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனத்தை பயன்படுத்தியிருந்தால், திரையின் மேல் காணப்படும் சாதனத்தை கிளிக் செய்ய வேண்டும்.அதன் மூலம் உங்கள் சாதனம் எங்குள்ளது என்பதை பார்க்க முடியும்.உங்களது சாதனத்தை பார்க்க முடியாமல் போனால், இறுதியாக சாதனம் இருந்த இடம் காண்பிக்கப்படும்.அதன் பின்பு திரையில் 2 ஆப்ஷன்கள் காணப்படும், அவை தான் Sound, Lock and Erase ஆகும்.இதில் Sound ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களின் சாதனம் இருந்த இடத்திலேயே சத்தத்தை ஐந்து நிமிடங்களுக்கு எழுப்பும். சாதனம் சைலன்ட் மோடில் வைக்கப்பட்டிருந்தாலும் இந்த அம்சம் கச்சிதமாக வேலை செய்யும்.ஒருவேலை Lock ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது சாதனம் லாக் செய்யப்பட்டு விடும். இறுதியாக Erase ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது சாதனத்தில் உள்ள அனைத்து தகவல்களும் அழிந்து விடும்

Related posts: