வான்வெளியில் இரவு நேர முகாம்  அமைக்க இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம்!

Tuesday, August 23rd, 2016

வான்வெளியை உன்னிப்பாக அவதானிப்பதற்கு ஏதுவாக இரவு நேர முகாம் ஒன்றை இலங்கை கோள் மண்டலம் ஒழுங்கு செய்துள்ளது.

இதன் மூலம் நாட்டு மக்களின் வானியல் விஞ்ஞான அறிவை விருத்தி செய்வது பிரதான நோக்கமாகும். இதன்படி ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் இத்தகைய முகாமொன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் முதலாவது நிகழ்வு எதிர்வரும் 26ம் திகதி இடம்பெறும். இதன்போது வானியல் விஞ்ஞான அறிவை விருத்தி செய்வதும் வானியல் தொடர்பான தகவல்களை பொதுமக்களுக்கு வழங்குவதும் நோக்கமாகும். இந்த முகாம் இரவு 7.00 மணியிலிருந்து 10.00மணி வரையாக மூன்று மணித்தியாலங்கள் இடம்பெறவுள்ளது பொதுமக்கள் இலவசமாக இந்த முகாமில் கலந்து கொண்டு வான்வெளியை கூர்மையாக அவதானிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது

Related posts:


இலங்கையில் போர்க்குற்றம் நிகழவில்லை என்பதை ஜெனிவாவிலும் நிரூபிப்போம் - அமைச்சர் வீரசேகர உறுதி!
மணல் கொள்ளையர்களுக்கு பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கும் இடையில் கைக்கலப்பு - அரியாலையில் நான்கு பொல...
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் 272 வெற்றிடங்கள் – செயற்பாடுகளை வினைத்திறனாக முன்னெடுப்பத...