திறனற்றுப் போகிறதா அன்டிபயோட்டிக்ஸ்?

Sunday, May 29th, 2016
அனைத்து வகையான அன்டி பயோட்டிக் மருந்துகளையும் எதிர்க்கும் திறன்கொண்ட நோய்க்கிருமி ஒன்று அமெரிக்காவில் முதல் முறையாகக் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகபட்ச திறன் கொண்ட கொலிஸ்டின் என்ற ஆன்டிபயோட்டிக் மருந்தை எதிர்க்கும் திறன்கொண்ட இ-கொலி கிருமி, நடுத்தர வயதுப் பெண் ஒருவரைத் தாக்கியிருந்தது. அதன் மூலமாகத்தான் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அன்டிபயோட்டிக் மருந்துகள் திறனற்றதாகப் போகும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்று அமெரிக்காவின் மூத்த சுகாதாரத்துறை அதிகாரி தாமஸ் ஃபிரைடென் தெரிவித்துள்ளார்.

அன்டிபயோட்டிக் மருந்துகளை எதிர்க்கும் திறன்கொண்ட கிருமிகள், ஏற்கெனவே கனடா, தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பா பிராந்தியங்களில் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: